நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Thursday, April 20, 2006

தன்னம்பிக்கையின் மறுபெயர் அலி அப்பாஸ்


அலி அப்பாஸ் என்கிற சிறுவனை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?...


நிச்சயம் இருக்கவேண்டும். மூன்று வருடங்களுக்கு முன்பு ஈராக் போரில் அமெரிக்க விமானங்கள் குண்டு வீசித் தாக்கியபோது அதில் தனது பெற்றோர் உட்பட 16 உறவினர்களைப் பறிகொடுத்த சிறுவன்தான் அலி அப்பாஸ்.

இதில் இன்னொரு வேதனை யான விஷயம். குண்டு வெடிப்பில் அலி அப்பாசின் இரண்டு கைகளும் துண்டாகி விட்டன. அப்போது அவனுக்கு 12 வயதுதான்.


துள்ளித் திரிந்து விளையாட வேண்டிய இளங்கன்று பருவத்தில் இருந்த அவனுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை வெளியே தெரிய வந்தபோது உலகமே அதிர்ந்து போனது.

பண்ணிய பாவத்திற்கு பரிகாரம் தேடுவதுபோல் துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அலி அப்பாசை இங்கிலாந்து அரசாங்கம் மேல் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்துச் சென்றது. இப்போதும் அவன் லண்டனில்தான் தங்கியிருக்கிறான்.

அவன் பள்ளிக் கூடப் படிப்பையும் தொடர்ந்து வருகிறான். கைகள் இரண்டையும் பறி கொடுத்து விட்டாலும் அலி அப்பாஸ் நம்பிக்கையை மட்டும் தளரவிடவில்லை.

அவனுக்கு கால்பந்து விளையாட, செயற்கை கைகளை பயன்படுத்தி உணவு சாப்பிட, பொருட்களை எடுக்க என்று பல்வேறு விதமாக அவனது சோகம் மறைய பயிற்சி தரப்பட்டது. 6 மாதங்களுக்குப் பின்னர் அவனது அந்த நாள் ஞாபகங்கள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கின.

இதனிடையே கால்களைக் கொண்டு ஓவியம் வரையவும் பழக்கினார்கள். என்ன ஆச்சர்யம், நான்கே மாதங்களில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் வாட்டர் கலர் ஓவியங்கள் வரையப் பழகி விட்டான்.

அப்படி அவன் வரைந்த 50-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் அண்மையில் தெற்கு லண்டனில் உள்ள ரிச்மாண்ட் ஆர்ட் காலரியில் விற்பனை கண்காட்சியாக வைக்கப்பட்டிருக்கிறது. மே மாதம் 26-ந்தேதி வரை அலி அப்பாசின் ஓவியக் கண்காட்சி நடக்கிறது.

விற்பனையாகும் இந்த ஓவியங்கள் மூலம் கிடைக்கும் தொகையை ஈராக்கில் உள்ள தன்னைப் போன்ற கை, கால் இழந்த சிறுவர்களுக்காக உதவப் போகிறான், அலி அப்பாஸ். இதே போல் அனாதைக் குழந்தைகளுக்கும் ஓரளவு நிதி திரட்டிக் கொடுத்து உதவப் போகிறானாம்.

கைகளை இழந்த நிலையிலும் தனது நாட்டுக் குழந்தைகளுக்கு கைகொடுக்க நினைக்கும் அலி அப்பாசின் நல்லெண்ணம் பாராட்டப்பட வேண்டியதே!

நன்றி: தினத்தந்தி

2 Comments:

At 1:50 PM, Blogger NambikkaiRAMA said...

நல்ல உடற்கட்டு இருந்தும் சோம்பித்திரிபவர்களுக்கு அலி அப்பாஸ்
வாழ்க்கை ஒரு சாட்டையடி.

அலி அப்பாஸ் பற்றி படிக்கும் போது ஜனார்த்தனம் என்ற சிறுவன் ஞாபகத்திற்கு வந்தான்.

 
At 2:06 PM, Blogger மஞ்சூர் ராசா said...

ஏற்கனவே அலியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது நம்பிக்கையிலும் வந்துள்ளது. மிகவும் பொருத்தமான கட்டுரை.

 

Post a Comment

<< Home