நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 207
ஆன்மீகம் எனது பார்வையில்...
இரவு கண்விழித்து தொலைக்காட்சி பார்த்து அதிகாலை 10 மணிக்கு :-) எழுந்து பெட்காபி குடித்து குளிக்க வேண்டுமே ... என்பதற்காக உடல் முழுதையும் நீரால் கொஞ்சம் நனைத்து காலை உணவை கடனே என்று உண்டும் உண்ணாமலும் , தன் உடலையும் உள்ளத்தையும் நோய்களின் சத்திரமாக கொண்டு, உழைத்த பணத்தையும் பொருளையும் மருத்துவர்களுக்கு கொடுத்துவிட்டு , சித்திரம் போன்ற நம் உடலை பேணாமல் அல்லலில் உழலும் விசித்திரப்பிறவிகள் பலர் வாழும் காலம் இது. இதில் இருந்து விடை பெற வேண்டாமா அன்பர்களே! தொடர்ந்து படியுங்கள்...
ஆன்மீகம் என்பது உடல் அழுக்கையும் மன அழுக்கையும் போக்கும் ஓர் அற்புதமான இலவச மருத்துவமனை என்றால் அது மிகையாகாது. ஆன்மீகத்தை பரப்பவே மதங்கள் தோன்றின. அன்பையே போதிக்கும் இஸ்லாம், கிறிஸ்துவம், இந்து மற்றும் அனைத்து மதங்களிலும் பொதிந்து கிடக்கும் ஆன்மீக மருத்துவமுறைகள் ஏராளம்! ஏராளம்!. ஆனால், இன்றைய சமுதாயம் ஆன்மீகம் என்ற பாதையில் இருந்து நாகரீகம் என்ற பெயரில் நரகமான வாழ்க்கைக்கு மாறிக் கொண்டு இருக்கிறது.
நம்மை நாமே நாகரீகம் என்ற பெயரில் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோம். நாகரீகத்தால் நமக்கு கிடைத்த நன்மையைக் காட்டிலும் பல மடங்கு தீமைகள்தான் கிடைத்துள்ளது. நாம் ஏன் மாறிக்கொண்டு இருக்கிறோம் என்று சிந்திதால் ஏமாறிக்கொண்டு இருக்கிறோம் என்பது புரியவரும். உதாரணத்திற்காக நாகரிகத்தின் பயனும் பலனும் இங்கு பார்ப்போம்.
கண்டு பிடிப்பு
1. ஒளி (ளிக்க்ட்)
பயன்: இருளில் தெளிவாய்ப் பொருட்களைக் காண பயன் படுகிறது
தீமை: கண் சம்பந்தமான பிரச்ச்னைகள்(ஈன்சொம்னிஅ) லொச்ச் ஒf Dஇச்cரிமினடிவெ Pஒநெர்
2. சக்கரம் :
பயன் : போக்குவரத்து இதனாலே சாத்தியமாயிற்று
தீமை : காற்று மாசுபடுதல்.
3.செயற்கை ரசாயணங்கள்:
பயன்: விவசாயப் புரட்சி
தீமை : மனித வாழ்நாள் குறைந்து போனது, உணவில் விஷம், ஒவ்வாமை, மூச்சுக்குழல் பாதிப்புகள்
4. அதிர்வலைகள்(FM &ஆM)
பயன்: தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி
தீமை : நரம்பு பாதிப்பு, முதுகு தண்டு பாதிப்பு, ஊளைச்சதை
மேற்கண்ட ஒவ்வொன்றும் ஆராய்ச்சி கட்டுரையாய் வரவேண்டியவை. சின்னதாய் குறிப்பிட்டுள்ளேன். விரிந்து சிந்தனை செய்தால் அவை நமக்கு புரியும்.
"வரும் முன் காத்தலே நலம்"
"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே " என்கிறார் திருமூலர்.
இன்றைய காலத்தில் தோன்றும் நோய்களுக்கு குணப்படுத்த மருந்து கொடுக்கின்றனர். அன்றையப் பெரியோர்களோ நோய்களை தவிர்க்கவே ஆன்மீகம் வாயிலாக தியானம் , உடற்பயிற்சி போன்றவற்றை அளித்தனர். சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இவை விளங்கும்.
இஸ்லாமிய அன்பர்களின் இறைவழிபாட்டில் முக்கிய அம்சம் தினமும் 5 முறை தொழுதல், வருடத்தில் 1 மாதம் நோன்பிருத்தல். இந்த இரண்டு விசயங்களைக் கடைபிடித்தாலே போதும், மனதையும் உடலையும் ஆரோக்கியமாய் வைத்துக் கொள்ள முடியும். தொழுகை செய்கையில் பல்வேறு நிலைகளில் உடலை மாற்றுவர் அதன்மூலம் உடலின் தசைகள் மற்றும் நரம்புகள் நன்றாகச் செயல் படுகின்றது. அசைவ உணவையே பிரதானமாய் அவர்கள் உண்டாலும் நன்கு ஜீரணமாகி விடுகிறது. மேலும் உண்ணா நோன்பு மூலம் தங்கள் உடலில் உள்ள தேவைக்கதிகமான கொழுப்பினை கரைத்தும் விடுகின்றனர். இஸ்லாத்தில் இருந்து சில துளியைத்தான் இங்கு குறிப்பிட்டேன்.
கிறிஸ்துவம் கூட்டுப்பிரார்த்தனைக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மனதினை ஒருமுகப்படுத்தவும் செம்மை படுத்துவும் , திடப்படுத்துவதும் மூலமாக ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம் என்பதை அவர்களது பிரார்த்தனைகள் விளக்குகின்றன.
கூட்டுப்பிரார்த்தனை மற்றும் பஜனை எனப்படும் இறைவன் புகழை ஆடிப்பாடி மகிழ்தல் மூலம் அளப்பரிய மனவலிமை கிடைக்கிறது. இதை இன்றைய உளவியலரும் ஒத்துக் கொள்கிறார்கள். அசனம் என்னும் சமபந்தி விருந்து சமுதாய பாகுபாடுகளை அகற்றி ஒற்றுமை உணர்வை உணர்த்துகிறது.
மிகத் தொன்மையான இந்துமதக் கொள்கைகளை எடுத்துக் கொண்டால் அதில் ஆயிரம் ஆயிரம் மருத்துவமுறைகள் காணப்படுகின்றன். ஆயுர் வேதம் ஆயுள் வேதம் என்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு கடவுளரும் ஒவ்வொரு மருத்துவராய் செயல்படுகின்றனர்.
உதாரணமாக ஞானக்கடவுள் விநாயகரை கருத்தில் கொண்டால் அவர் பெரும் பாலும் நீர்நிலைகளில் அரச மரமும் , வேம்பு மரமும் இணைந்த இடங்களில் வீற்று இருபார். இவ்விரண்டு மரங்களின் சேர்க்கை சுற்றுப்புரத்தில் உள்ள நச்சுக்க் கிருமிகளை நீக்கும் தனமை வாய்ந்தது. தோப்புக்கரணம் போடும் போது நமது உடலின் ஆதாரமாக விளங்கும் மூலாதாரச் சக்கரம் உற்பத்தி செய்யும் மின்காந்த அலைகள் சுவாதிஷ்டாணாம், அனாஷகதம், மணிபுராகம், விசுத்தி, ஆக்ஞா சகஸ்ராரம் என்ற சக்கரங்களின் மூலமாக சிரசை அடைகிறது. பின்னர் தலையய குட்டிக் கொள்வதன் மூலம் உடல் முழுதும் பரவுகிறது. மூளை செல்கள் புதுப்பிக்கப் படுகின்றது. ஞானம் , புத்திசாலித்தனம் பெருகுகிறது( சிலர் ஏதேனும் யோசனை செய்கையில் தலையை சொறிவதை காண்போம். அதன் பின் விளக்கம் இப்படித்தான்)
குழ்ந்தைப்பேரு அற்றவர்கள் பழனி சென்று முருகனை தரிசித்தால் பாக்கியம் அடைவர்கள் என்றார்கள். காரணம் பதையாத்திரை சென்று கந்தனை காண்கையில் வழியில் உள்ள கற்கள் பாதங்களில் படுவதன் மூலம் அக்குபஞ்சர் சிகிச்சைபோல் குணம் கிடைக்கிறது. கர்ப்பப்பை தசைகள் சுருங்கி விரிந்து வலுவடைகிறது. சுத்தமான காற்றால் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைகிறது. கர்ப்பபை மலங்கள் வியர்வையினால் வெளியேறி விடுகின்றன. குழந்தைப் பேறும் வாய்க்கிறது.
பழங்கால கோயிலகள் வாஸ்துவை அடிப்படையாய்க் கொண்டு கட்டப்பட்டவை. மேலும் சமஸ்கிருத , தமிழ் மந்திரங்கள் , அபிஷேகங்கள், கற்பூர ஆராதனைகள் இவற்றினால் கோயில் கொடி மரங்களின் அமைப்பினால் ஒரு நேர்மறையான சக்தி கோயிலில் நிரம்பிக் காணப்படும். ஆகையால்தான் நாம் ஆலயம் சென்றால் நம் ஆ(ன்மா) லயமாகிறது. இன்னும் விரிவாக எழுதிக் கொண்டே செல்லலாம். இருப்பினும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பதற்கேற்ப இத்துடன் நிறைவு செய்கிறேன்.
அனைத்து மதங்களும் போதிக்கும் சில முக்கிய கடமைகள்
1. அதிகாலை எழல்
2. குளிர்நீரில் குளித்தல்
3. தினசரி வழிபாடு மற்றும் தியானம்
4. பஜனை பாடுதல்
5. உபவாசம்(விரதம்)
6. மந்திர உச்சாடனை செய்தல்
7. பாத யாத்திரை
ஆகவே மதங்கள் எனப்படுவது மனிதனை நல்வழிப்படுத்தவே உருவானது. அதை சிலர் தவறாய் பயன்படுத்துவது கண்டிக்கத் தக்கது.
அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கிறது.
எம்மதமும் நல் மதமே! அனைத்தும் சம்மதமே!
ஆன்மீகம் நம் உடலையும் உள்ளத்தையும் கட்டிக்காக்கவே பயன்படுகிறது.
ஆன்மீகம் அறிவோம்! அன்பாய் வாழ்வோம்!
நன்றி!