நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Tuesday, May 23, 2006

தம்பி தங்கைகளே!

அன்பிற்கினிய தம்பி தங்கைகளே!

பள்ளிப் படிப்பை முடித்து விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

சிலர் தாம் நினைத்த மதிப்பெண்களை அடைந்து மகிழ்ச்சியில் இருப்பர்! சிலர் நினைத்த மதிப்பெண் இன்றி துக்கத்தில் செய்யும் வகையறியாது இருப்பர். யான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். மதிப்பெண் குறைந்து போனது என்று நீங்கள் இனியும் வருத்தப் படுவதில் கொஞ்சமும் லாபம் இல்லை. உங்களை நீங்களே நொந்து கொள்வதாலோ! முகத்தை தொங்க விட்ட படி அலைவதாலோ, பித்து பிரேமை பிடித்தவன் போல் இருப்பதாலோ மதிப்பெண் ஒன்றும் கூடிவிடப் போவது இல்லை.

தவறு செய்து விட்டீர்கள். முதலில் அதை ஒத்துக் கொள்ளுங்கள். 12 வருட பள்ளிப்படிப்பின் முக்கியத்துவத்தை இப்போதாவது உணர்ந்து இருப்பீர்கள். உணர வில்லை எனில் உங்கள் கதி அதோ கதிதான். சரி விசயத்திற்கு வருகிறேன்.

நீங்கள் இனி செய்ய வேண்டியது ஒன்றுதான். இனி நான் தொடுக்கும் செயலில்/படிப்பில் வெற்றி மட்டுமே என் கண்ணுக்கு தெரியும் என்று ஒரு உறுதியான முடிவு எடுக்கவேண்டும். அதற்காக உழைக்க வேண்டும்.

ஆறுதலாய் ஒரு மொழி! வெறும் +2 மதிப்பெண்கள் மட்டும் ஒருவனை பேரறிஞன் ஆக்கி விடாது. சில உறுதியான திட்டங்களை நீங்கள் கைக்கொள்ள வேண்டும்.

நடந்தது நடந்து விட்டது. நடக்கப் போவது இனி நாம் எப்படி செயல்படப் போகிறோம் என்பதைப் பொருத்தே இருக்கிறது. எனவே,அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை முடிவு செய்யுங்கள்.

நீங்கள் அடைந்த தோல்வி உங்களுக்குள் அடுத்து நீங்கள் அடையப் போகும் வெற்றிக்கு தூண்டலாக இருக்கட்டும்.

நீங்கள் நினைத்தால் நிச்சயம் ஜெயிக்க முடியும்.

வெற்றி மட்டும் இனி உங்கள் கண்களுக்கு தெரியட்டும்

அன்புடன்,
அண்ணன்.

0 Comments:

Post a Comment

<< Home