நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Tuesday, June 20, 2006

நம்பிக்கை போட்டி முடிவுகள்!!!

குரு வாழ்க! குருவே துணை!

நம்பிக்கை போட்டி முடிவுகள்!!!

["நம்பிக்கை! நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! இறைவனிடத்தில் நம்பிக்கை! இதுதான் வாழ்க்கை" - சுவாமி விவேகானந்தர் ]

அன்பின் இணைய நண்பர்களே!

உங்கள் அனைவருக்கும் நம்பிக்கையின் மனம் நிறைந்த வணக்கங்கள்! வாழ்த்துக்கள்!

உங்கள் நம்பிக்கை தனது முதலாம் ஆண்டுவிழாவை சிறப்பாய் கொண்டாடும் இத்தருணத்தில் ..

நம்பிக்கையின் அழைப்பின் பேரில் கதை, கவிதை, கட்டுரை போட்டிகளுக்காக தங்கள் படைப்புகளை ஆர்வமுடன் அள்ளித் தந்த அனைத்து படைப்பாளிகளையும் இந்நேரத்தில் நம்பிக்கை பெரிதும் பாராட்டுகிறது. அது மட்டுமல்ல 7 நடுவர்கள் தங்கள் பணியை மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார்கள். 7 நடுவர்களும் அவரவர் துறையில் மிகச் சிறப்பானவர்கள். ஆகவே, அவர்களையும் .. பரிசு வழங்க பொருளுதவி செய்த அன்பர்கள் காழியூரார், பரஞ்சோதி அண்ணா, முத்தமிழ் மஞ்சூரார், விஜிசுதன் மற்றும் தனிப்பட்ட முறையில் பரிசுவழங்கும் அன்பர்களையும் பின்னூட்டமிட்ட அனைவரையும் நம்பிக்கை பாராட்டி மகிழ்கிறது.

நம்பிக்கை குழுமம் இந்தப்போட்டியில் சின்ன புதுமையை புகுத்தி இருந்தது.. என்னவெனில் , "படைப்பாளிகள் பற்றிய விபரம் நடுவர்களுக்கு தெரியாது .. நடுவர்கள் யார் என்பது படைப்பாளிகளுக்கு தெரியாது" என்பதே அது. ஒரு வெளிப்படையான நியாயமான பாரபட்சமற்ற பின்னூட்டம்/ மதிப்பெண்ணை படைப்புகள் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அப்படி செய்யப்பட்டது. அந்த நோக்கம் இன்று வெற்றியும் அடைந்து உள்ளது.

இந்த தருணம் யார் யார் வெற்றி பெற்றார்கள் .. யார் யார் நடுவராய் இருந்தார்கள் என்பதை அறிந்திட இருதரப்பினரும் மிக்க ஆவலுடன் இருப்பதை எம்மால் அறிய முடிகிறது :)) நடுவர்களும் தாங்கள் அதிக மதிப்பெண் அளித்த படைப்பு முதலிடம் பெறுமா என்ற ஆவலில் நிச்சயம் இருப்பார்கள்.

உங்கள் ஆர்வத்திற்கு மேலும் அணை போடலாகுமா :))

50 க்கும் மேற்பட்ட அருமையான படைப்புகள்.. 7 நடுவர்கள் என்று ஆரம்ப போட்டியே அமர்க்களமாய் அமைந்து விட்டது. இந்த வெற்றிக்கான முழுப் பெருமையும் உங்களைத்தான் சேரும்.

சில படைப்புகள் இன்னமும் செதுக்கப்பட வேண்டியதாய் இருந்தது. சில படைப்புகள் செதுக்கிய சிற்பமாய் மின்னியது. ஒரு பள்ளி மாணவி கூட இந்தப் போட்டியில் பங்கு எடுத்தது நம்பிக்கைக்கு பெருமை அளிக்கும் விசயமாய் இருந்தது.

ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு படைப்புகள் என்று 6 படைப்புகள்(பொற்காசு மற்றும் புத்தகம்) பரிசுக்குரியவையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர சில படைப்புகளுக்கு சிலர் தனிப்பட்ட முறையில் பரிசளிக்கவும் விரும்பி உள்ளார்கள். நியாயமாகப் பார்த்தால் நம்பிக்கையின் பார்வையில் , தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி போட்டிக்கு தங்கள் படைப்பை அனுப்பிய அனைத்து படைப்பாளிகளும் பரிசளித்து கௌரவிக்கப்பட வேண்டியவர்களே. அதற்கான வாய்ப்பு வசதிகளை வருங்காலம் தரும் என்ற நம்பிக்கையில் முடிவுகளை இங்கு அறிவிக்கிறோம்.

நடுவர்களாக சிறப்பு பணி ஆற்றியவர்கள்!!

1. சாது . ஸ்ரீ. காழியூரன் ஞானசம்பந்தன் அவர்கள்
(எம் இனிய ஆன்மீக நண்பர்)

2. உயர்திரு "ஔவைக்குறள் " ஞானவெட்டியான் ஐயா அவர்கள், திண்டுக்கல் .
(சித்தம் குழும நிறுவனர், முன்னாள் ஸ்டேட்பாங்க் தலைமை மேலாளர், தமிழ்ப்பயணியில் ஞானம் பயிற்றுவிப்பவர்)

3. "இணைய குறளாசான்" முனைவர் . இரவா (எ) வாசுதேவன் B.Litt., M.A., M.Phil., Ph.Dஅவர்கள்.
(தமிழ் ஆராய்ச்சியாளர், குழந்தை இலக்கியக் கவிஞர், ரிசர்வ் பாங் ஆப் இண்டியா, சென்னை)

4. கோவைத் திரு வேந்தன் அரசு (எ) ராஜு ராஜேந்திரன் அவர்கள்
(தமிழ் ஆர்வலர், மென்பொருள் வல்லுனர், சின்சின்னாட்டி , அமெரிக்கா)

5. அன்பு நண்பர் திருவாளர் மஞ்சூர் ராசா (எ) சுந்தர் அவர்கள்,
( முத்தமிழ்க் குழும நிறுவனர், தமிழ் ஆர்வலர், குவைத்)

6. அன்புசால் திருமதி . காந்தி ஜெகன்நாதன் அவர்கள்
(அன்புடன் குழுமம், முருகப்பா குரூப்ஸ் நிறுவனத்தின் காரியதரிசி)

7. அன்புச் சகோதரி "தன்னம்பிகை கவிதாயினி" விஜிசுதன் அவர்கள்
(முன்னாள் வானொலி அறிவிப்பாளர், கனடா)

படைப்பாளிகள் நடுவர்களை அறிந்தாயிற்று.. இனி பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் விபரம் மற்றும் படைப்பாளியின் பெயரைக் காண்போம்!

படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம்


7 நடுவர்களும் படைப்பின் கருத்து, தெளிவு, நடை, சமுதாய நோக்கு என்ற ரீதியில் பகுத்து 10 க்கு தங்கள் மதிப்பெண்ணை அளித்து இருந்தார்கள். அந்தப் புள்ளிகளைக் கூட்டி மொத்த மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்பட்டு .. ஒவ்வொரு பிரிவிலும் பரிசுக்குரிய இரண்டு படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சிலரை வெகுவாய் பாதித்த படைப்புகளும் சில புள்ளிகள் வித்தியாசத்தில் வாய்ப்பை நழுவிய படைப்புகளும் சிறப்பு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.


பொற்காசுப் பரிசு பெறும் படைப்புகள்

கதை

1. மஹா சக்தி - நிலா அவர்கள்
2. உயர்வுள்ளல் - "ஆல்பா சித்தா" ரவீந்தரன் கிருஷ்ணசாமி அவர்கள்

கட்டுரை
1. எதிர்கால இந்தியா - புலவர். கா. பரமார்த்தலிங்கம் எம்.ஏ.பிட் அவர்கள்
2. காலமே நமது தெய்வம் - ஜெயஸ்ரீ (+2 மாணவி)

கவிதை
1. வாயுதேவா - டாக்டர் . சுந்தர் பரத்வாஜ் , கோவை
2. வாழ்வியல் வேதம் - இராகவன் @ சரவணன் , பெங்களூர்

படைப்புகள் நம்பிக்கை வலைப்பூவில் வலையேற்றப் படும் ..

சிறப்பு பரிசுக்குரிய படைப்புகள்


1. 'அஸிபத்ர வனம்' மற்றும் 'ஆறு' படைப்பிற்காக - ராம்பிரசாத். கே, சென்னை

2. பள்ளம் என்பது (கவிதை) - அனந்த லக்ஷ்மி அம்மாள்
3. 'என் அன்பு அம்மா' மற்றும் 'சிவமடம்' - விசாலம்

4. நம்பிக்கையின் வலிமை - நம்பிக்கை பாண்டியன்

5. ஆன்மீகக் கட்டுரை - பக்ரூதீன்
6. அஷ்டவக்ரன்(நாடகம்) - மாதங்கி

7. இறைவனின் செல்லக் குழந்தைகள் - பரமேஸ்வரி

8. நம்புங்கள் நாளை நமதே - தியாகு, திருப்பூர்


குறிப்பு: வெற்றி பெற்ற படைப்பாளிகள்.. பரிசை (நேரில் அல்லது தபாலில்) பெற தாங்கள் படைப்பை அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து தங்களது தொலைபேசி எண், முகவரியோடு கீழ்க்கண்ட மின்னஞ்சல்களுக்கு மடலிடுமாறு ..அன்புடன் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.

1.பரஞ்சோதி paransothi@gmail.com
2.உமாநாத்(எ) விழியன் umanaths@gmail.com
3.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com
நம்பிக்கையின் மீது மிக்க அன்பு கொண்டுள்ள அனைத்து நல்லோர்களுக்கும், போட்டியை சிறப்புற நடத்திட உதவி செய்த நம்பிக்கையின் மேலாளர்கள் பரஞ்சோதி அண்ணா, விழியனுக்கும் இந்நேரம் நம்பிக்கை தனது நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.

நல்ல சத்சங்கம் மூலமாக நற்சிந்தனை வளர்க்க நம்பிக்கைக்கு வருகை தாருங்கள்!

நன்றி! நன்றி! நன்றி!

வந்தே மாதரம் ! ஜெய் ஹிந்த்!
இவண்,
நம்பிக்கைக் குழுமம்.

7 Comments:

At 9:35 AM, Blogger Ram.K said...

மிகவும் பெருமையாக உணர்கிறேன்.

மிக்க நன்றி.

ராம்.கே

 
At 11:04 AM, Blogger நிலா said...

நம்பிக்கைக் குழுமத்திற்கு மிக்க நன்றி. எனது சிறுகதைக்காக நான் பெறும் முதல் பரிசு இதுவே. என்னை வெகுவாக ஊக்குவித்துள்ளது இந்த அங்கீகாரம்.

நிர்மலா ராஜுவை என்ற என் இயற்பெயரை நிலா என்ற என் புனைபெயருக்கு மாற்றுவீர்களா தயவுசெய்து?

போட்டி கனகச்சிதமாக திட்டமிடப்பட்டு நேர்த்தியாக நடத்தப்பட்டுள்ளது.

திரைமறைவிலிருக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்

நிலா

 
At 12:44 PM, Blogger மாதங்கி said...

போட்டியில் ஆர்வத்துடன் பகிர்ந்துகொண்ட உள்ளங்களுக்கு என் வாழ்த்துக்கள்
என்னுடைய படைப்பின் தலைப்பு
நம்பிக்கைக்கு ஒரு அஷ்டவக்ரன் என்பது.
குறித்தநாளில் முடிவை அறிவித்துவிட்டீர்களே.

 
At 1:38 PM, Blogger பரஞ்சோதி said...

வெற்றி பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துகள்.

போட்டியில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள், வருங்காலங்களில் வெற்றி பெற்றவர்களில் பட்டியலில் இடம் பிடிகக் வாழ்த்துகள்.

 
At 3:04 PM, Blogger G.Ragavan said...

போட்டியில் பங்கு கொண்ட, நடத்திய, வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

 
At 4:09 PM, Blogger jeevagv said...

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கு பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்! போட்டியை நடத்தியவர்களுக்கும், நடுவர்களுக்கும் பாராட்டுக்கள், மேலும் தொடரட்டும் இதுபோன்ற முயற்சிகள்!

-ஜீவா

 
At 4:54 PM, Anonymous Anonymous said...

சிறப்பாக போட்டியை நடத்தி முடிதுள்ளீர்கள்
வெற்றி பெயற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள,்பங்கேயற்றாவர்களளுக்கும் வாழ்த்துக்கள்

 

Post a Comment

<< Home