நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 301
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நாம்
(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்)
கண்முன் உலகம் விரியும்
உள்ளங்கையில் உள்ளது கணினி-ஆனால்
கணினிகள் காட்டும் உலகம் கணினி
காட்டுமோ மனித இதயம்
சந்திரனை தொடலாம் - நாளை
செவ்வாயில் வசிக்கலாம் ஒளியின்
வேகத்தை மிஞ்சலாம்விதையின்
பாகத்தை மாற்றலாம் – ஆனால்
கணினிகள் காட்டும் உலகம் கணினி
காட்டுமோ மனித இதயம்
கண்டம் விட்டு கண்டத்தை ஏவு
கணைகளால் தொடலாம் உடல்
பிண்டத்துடன் பறக்கலாம் விண்ணில்-ஆனால்
கணினிகள் காட்டும் உலகம் கணினி
காட்டுமோ மனித இதயம்
மனிதன் வகுத்த நெறிகள் இங்கு
மனிதனை வாழ விடவில்லை இன்று
மனிதன் படைத்த கருவிகளால் -மனித
மனசை புரிய வழியில்லை -உலகில்
மனிதனை மனிதன் சுரண்டுவது
மடியும் காலம் வருமோ - மீள
வழிகள் காட்டி தருமோ!
* குறிப்பு
1. மனித வாழ்க்கையில் கம்ப்யூட்டர் போன்ற பல அறிவியல்
கருவிகள் வந்தபின்பும் மனிதநேயம் வளரவில்லை
அது வளர்ந்தால்தான் இந்த அறிவியல் முன்னேற்றத்தால் பலன் என்ற கருத்தை வலியுறுத்த இந்த கவிதைஎழுதப்பட்டது
3 Comments:
நல்ல சிந்தனை! இந்த கணினிதான் உங்கள் கவிதையையும் அரஙகேற்றியுள்ளது என்பதை உங்களால் மறுக்க முடியாது
நற்கவிதை
அருமையான ஒரு கருத்தினை முன்வைத்துள்ளார் படைப்பாளி, நல்ல ஒரு கருத்து, இன்றைய சமூகத்திற்கு தேவையான கருத்து, மனித நேயம் செத்துக்கொண்டு வரும் இந்த நாளில் இதுபோன்ற கருத்துக்கள் வரவேற்கத்தக்கது, இன்னும் இதுபோன்ற கவிதைகளை படைப்பாளியிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்,
பிரியங்களுடன்,
ஸ்ரீஷிவ்...:)
Post a Comment
<< Home