நம்பிக்கையின் கவிதைப் போட்டி 101 - உன்னிலும் என்னிலும்
நம்பிக்கையின் இரண்டாம் ஆண்டு விழா கவிதைப் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் கவிதைகள் இங்கே கொடுக்கப்படும்.
நம்பிக்கையின் கவிதைப் போட்டி 101
உன்னிலும் என்னிலும்
உன் சிறுவயது மிட்டாய் கலர் பாவாடை சட்டை,
என் முதல் பச்சைக்கலர் பேண்ட் ...
உனது அறுவை சினேகிதி
எனது புருடா நண்பன்....
உனக்கு பிடித்த ஆப்பிள் ஜுஸ்
எனக்கு பிடித்த வோட்கா..
உன் உளம் கவர்ந்த நாவலாசிரியர்
என் ஆசை கால் பந்து வீரன்...
உன் முதுகு மச்சம்
என் மார்புக்கீறல்..
உன் தாலிக்கொடியின் அழுத்தம்
என் மீசையின் குத்தல்
என இன்னும் ஆழமாய்
எல்லாம் பகிர்ந்து கொண்டாலும்...
உன்னிலும் என்னிலும்
சில சொல்லாமல் இருக்கத்தான் செய்கிறது
இன்னமும்...
உதாரணமாய் என் முதல் காதல்....
உன்னில் ..?
(நண்பர்களே! உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்).
1 Comments:
/*உதாரணமாய் என் முதல் காதல்....
உன்னில் ..?*/
இவ்வரிகளில் எழுந்து நிற்கிறது கவிதை..படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்
Post a Comment
<< Home