நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 202
காலமே நமது தெய்வம்
குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கட்டுரை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்)
காலம் பொன் போன்றது என்பர் மூதோர், எனினும் நேரம்தான் தெய்வம் என்பதை ஆழ்ந்து சிந்திதோமானால் புரிந்துக் கொள்ளலாம்!!
பொழுது போதவில்லை கவனிக்கவும் போதவில்லை என்பவர்கள் முன்னேற்றப் பாதையில் மிக வேகமாகச் சென்றுக் கொண்டிருக்கின்றனர்.!மிக வேகமாக நடக்கின்றனர்.மகிழ்ச்சியோடு இவ்வுலகை பார்க்கிறார்கள்!ஹலோ நலம்தானே ?என்கிற சிறிய வார்த்தையோடு தங்கள் உரையாடலை முடித்துக்கொண்டு தங்கள் கடமையாற்ற பறந்துக் கொண்டுள்ளனர்!இவர்களைக் கேளுங்கள் " உலகிலேயே விலை மதிக்க முடியாத செல்வம் நேரம்தான் என்பார்கள்!! time is wealth !!
பொழுது போகவில்லை கவனிக்க போகவில்லை என்பவர் வாழ்க்கையில் ஏணிப்படியிலிருந்து இறங்கிக் கொண்டிருப்பவர்!!மெல்ல நடப்பார்!!தானும் சோர்வாக இருந்து அடுத்தவரிடமும் சோர்வை விதைப்பவர்!!எல்லாம் தெரிந்தவர் போல் அடுத்தவர் செயல்களுக்கும் முட்டுக் கட்டை போடுபவர்!!ஒன்றும்செய்யவிடமாட்டார்.விரக்தியாக்ப் பேசி ஏதோ இருக்கிறோம் என்று கிடக்கிறேன்,உயிரோடு இருக்கிறேன் என்று செத்துப் போனவர்களைப்போல் பேசுவார். இவர்கள் பார்த்தீனியம் விஷச் செடியைப் போன்றவர்!!
நான் ஏன் காலத்தை தெய்வம் என்றுக் கூறுகிறேன் தெரியுமா!!உலகில் தோன்றிய எல்லோருக்கும் இறைவன் தந்த செல்வம் கால்ம்தான்!! உயர்ந்தவன்,தாழ்ந்தவன், எழை, பணக்காரன் ,ஆள்பவன் ,அடிமை அனைவருக்குமே வஞ்சனையில்லாமல் இறைவன் வழங்கியது காலத்தை மட்டுமே!!
இறைவனை எப்படி மதித்து பூசிக்கிறோமோ அப்படியே காலத்தையும் கருதுங்கள்!!
ஒவ்வொருவர் வாழ்விலும் தேர்வு எழுதி வெற்றிப் பெறுகிறோம்!! நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெறுகிறோம்! விரும்பியப் பெண்ணை அல்லது ஆணைத் திருமணம் செய்துக் கொள்கிறோம்!! திட்டத்தை முடித்து வெற்றிக் காண்கிறோம்!!இவை எல்லாம் நம் வாழ்வில் வரலாற்றுச் சிறப்புடைய நாட்கள்!!
இப்படித்தான் ஒவ்வொரு நாளையும் மதிப்புமிக்க நாட்களாக valuable time ,days நாம் மாற்றவேண்டும்!!எண்ணி எண்ணி மகிழத்தக்க நாட்களாக உருவாக்க வேண்டும்!!
எண்ணிப் பார்ப்போமா!!இப்போது நம் வயது என்ன!!இந்த வயதில் என்ன என்ன செய்து முடித்து இருக்கிறோம் !!என்னென்ன செய்து முடித்திருக்க வேண்டும்!ஏன் அவற்றை செய்யவில்லை!! என்று நாம் சுயப் பரிசோதனை செய்யத் தொடங்குவோமானால் வெற்றி நமக்கு மிக அருகில்தான்!! காற்றடித்த திசையில் சென்றவன் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு திரும்புவதில்லை!!காலத்தைப் பற்றிக் கவலைப் படாதவனும் வெற்றியின் பக்கம் கூட நெருங்குவதே இல்லை!!மாறாக விலகி வெகு தூரம் சென்றுவிடுகிறான்!!
கொடுப்பதோ,வாங்கவோ முடியாததும் காலம்தான்!!அவரவர் காலத்தை அவரவர்தான் பயன்படுத்த வேண்டும்!!!!
இதோ உங்கள் காலமும் உங்கள் கையில்தான்!!இன்றைய 24 மணித்துளிகளையும் திறமையாகப் பயன்படுத்துங்கள்!!ஒவ்வொருத் துளியையும் வரலாறாக மாற்றுங்கள்!!வரலாற்றை உருவாக்குகின்ற மாமனிதர் ஆகுங்கள்!!இன்றைய நாள் நம் வரலாற்றில் பொன்னான நாள்!! நேரமே தெய்வம் என்ற மாறுப் பட்டக் கருத்தை அறியத் தொடங்கிவிட்டோமல்லவா!!இனியாவது நாம் வாழ்க்கையைத் திட்டமிடத் தொடங்குவோம்!!
காலை 4 மணித் தொடங்கி இரவு உறங்கும் வரையிலான நாட்குறிப்பை வைத்திருக்கும் நிர்வாகிகளைப் பாருங்கள்!!ஒவ்வொரு மணித்துளியுலும் என்னஎன்னச் செய்யவேண்டும் ,யார் யாரைச் சந்திக்க வேண்டும் என்றுக் கட்டம் கட்டிவிட்டிருப்பார்கள்!!
எல்லோருமா நிர்வாகத்தில் உயர்ந்து நிற்கிறார்கள்!! ஒரே படிப்புத்தான்!!ஆனால் ஒருவர் மட்டுமே தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்!!அது ஏன்!திறமை மட்டுமாக் காரணம்!!இல்லை தனித் திறமைதான் காரணமா!இல்லை இல்லை காலத்தை தெய்வமாக்ப் போற்றி ,காலத்தை சரிவர பயன் படுத்தியதும்தான்!!
இந்த எனது சிறியக் கட்டுரை உங்கள் மனதை சிறிதாவது அசைக்குமானால் அதுவே உங்கள் வாழ்க்கையை வரலாறாக உயர்த்தும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு!!
முன்னுரை எழுதாதின் காரணமே அதை எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாமே என்றுதான்!!
முடிவுரையாக சில கருத்துக்கள்!நாமும் நமது நாடும் முன்னேற ,வளம் பெற நம் நேரத்தை திறமையாக ,முழுமையாகப் பயன் படுத்த வேண்டும்!!காலத்தை மதித்து நடத்துவதே இறைவனுக்கு செய்யும் திருத் தொண்டாகும்!!!
__________________________________________________________
(இதை எழுதியவர் ஒரு பள்ளி மாணவி )
ஒரு பள்ளி மாணவியிடம் இருந்து போட்டிக்கென வந்திருப்பதை பார்க்கையில் நம்பிக்கைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியய் இருக்கிறது. இம்மகிழ்ச்சியை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.
0 Comments:
Post a Comment
<< Home