நம்பிக்கை போட்டி அறிவிப்பு!
அன்பின் இணைய நண்பர்களே!
நம்பிக்கை பிறந்தநாள் விழா போட்டிக்காக 50 க்கும் மேற்பட்ட படைப்புகள் குவிந்துள்ளன. நேற்றோடு படைப்புகள் பெறுவது நிறுத்தப் பட்டது.
நம்பிக்கையின் அழைப்பின் பெயரில் ஆர்வமுடன் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து அன்பர்களுக்கும் , நடுவர் பொறுப்பில் தங்கள் பொறுப்பை சீருடன் செய்துவரும் பெரியோர்களுக்கும் , பரிசளிக்க உள்ள அன்பர்களுக்கும், தங்கள் நண்பர்களையும் ஆர்வமுடன் பங்கேற்க வைத்தவர்களுக்கும் மிக்க நன்றி!
சிலர் தனிப்பட்ட முறையிலும் சில படைப்புகளுக்கு பரிசளிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
படைப்புகள். அடுத்த வாரம் முதல் படைப்பளியின் பெயரோடு நம்பிக்கையில் மிளிரும்.
போட்டி முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த ஆறு படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்பட உள்ளது.
உங்கள் மேலான ஆதரவிற்கு நன்றி!நன்றி! நன்றி!
--
Join: http://groups-beta.google.com/group/nambikkai/
4 Comments:
50 படைப்புகள் or 500 படைப்புகள்?
//50 படைப்புகள் or 500 படைப்புகள்? //
ஹா ஹா ஹா .. 500 க்கு குறைவான படைப்புக்கள் :)
ஆயிரம் பொன்னாச்சே சொக்கா நீஎங்க இருக்க
சொக்கா இல்லை ராமா!
தியாகு, ராமா வேலைப்பளு மற்றும் பயணத்தில் இருக்கிறார்.
Post a Comment
<< Home