சாதனையின் எல்லை நோக்கி
இளைஞனே!
எட்டு திக்கும்
எழுது உன் சாதனையை.
தவறி விழும் போதெல்லாம்
தட்டியெழுப்பு
தன்னம்பிக்கையை.
திசை எதுவென்று
தெரியாது பயணித்தால்
இலக்கை தொடுவது
இயலாத காரியம்.
கண் இமை நகர்த்தி
கவனமாய் பயணித்தால்
சரியான இலக்கு
சரணடையும் உன்னிடத்தில்.
கரை நோக்கி வருவதுதான்
கடல் அலையின் இலக்கு.
வான் நோக்கி செல்வதுதான்
அகல் விளக்கின் இலக்கு.
அது போல நீ
சாதனையின் எல்லை நோக்கி
புறப்படும் போதுதான்
வாழ்வதற்கு ஓர் அர்த்தமாகும்.
நன்றி: கே.என்.சுதா ரவிச்சந்திரன், மணமேல்குடி. (தினத்தந்தி - இளைஞர் மலர்)
0 Comments:
Post a Comment
<< Home