நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Tuesday, May 30, 2006

நம்பிக்கை கவிதை போட்டி 306

பெண் என்பவள் நமது தெய்வமே!

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்த படைப்பு இது)

படைப்பாளி பெயர் : திருப்பூர். தியாகுபெண் என்றால் பேயும்
இரங்கும் என்றார்கள் -ஆமாம்
இனம் இனத்தோடு
சேரும் என நினைத்தேன்!

பெண்என்றால் மாயை
என்றார்கள் -ஆமாம்
புரியாதது எல்லாம்
மாயை தானே என்றேன்!

எனது கருத்துக்கள்
இவ்வாறு இருக்க
அன்னை காளி
கனவில் வந்தாள்
அவனியில் எனக்கோர்
ஆக்கம் தந்தாள்!

அத்தனை பெண்ணிலும்
உள்ளவள் நானே
அக்காவாய் தங்கையாய்
அமைந்த பெண்கள்
அனைத்தும் நானே

என்னை வணங்க
நினைத்தால் முதலில்
பெண்ணை வணங்கு
போதும் என்றால்!

பெண்ணவள் கண்ணீர்
பெற்றவன் உலகில்
பெற்றவை அனைத்தும்
இழப்பானென்றால்!

0 Comments:

Post a Comment

<< Home