நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 204
நம்மை நாம் அறிவோம்
(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கட்டுரை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).
எல்லாம் தெரிந்தவன் நான் ஒன்றைத் தவிர!! நான் யார் என்பதுதான் அது !!!அதுதான்தெரியவில்லை!!நாம் விரும்பி இவ்வுலகத்தில் பிறக்கவில்லை!!அன்னை,தந்தை இணைந்த தயவால் பிறந்தோம்.அதே போல்தான் மரணமும்!நம்மைக் கேட்டு வரப்போவதில்லை.விரும்பாவிட்டாலும் கண்டிப்பாக வந்து சேரும்!ஏன் இந்த ஜனனம் மற்றும் மரணம்!
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது!!ஆனால் அரிதானப் பிறவியை எடுத்துவிட்டோம்,எடுத்து சாதித்தது என்ன!!சாதிக்கப் போவது என்ன!
இதுவரை சாதித்தது என்ன!!இதுவரை யாரை எல்லாம் துன்பபடுத்தி இருக்கிறோம்!!எத்தனை பேரை மகிழ்ச்சியாக்கி உள்ளோம்!!உள்ளன்போடு எத்தனை பேருக்கு உதவி உள்ளோம்!!கடனே என்று விருப்பமில்லாமல் உதவி உள்ளோம்!!உதவுவதாக நடிக்கிறோம்!!
நான் யார் என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புங்கள்,அங்குதான் ஆரம்பமாகிறது தந்நிலை அறிதல்!!அதுதான் ஆத்ம விசாரணை!!ஒவ்வொருவரும்,பிறவி எடுத்தவரும் தன்னுள்ளே பேசி ஆத்ம விசாரணை செய்ய ஆரம்பித்தால் நாம் பிறவி எடுத்ததின் ரகசியம் புரிய ஆரம்பிக்கும்!!
மனிதன் என்பவன் யார்? உள்ளம்,புத்தி, மனம் ,உடல் என்று விரிந்திருப்பவன்!இதில் எதையும் தனித்துப் பார்க்க இயலாது!!எல்லாம் இணைந்துதான் இயங்கும்!!வெளி உடல் எப்படியோ அப்படித்தான் உள் உடலும்!!அதனுள்ளும் பல அடுக்குகள் உண்டு!!என்ன வெளியில் காணும் உடலை ஸ்கான் செய்யலாம்!!மனத்தினுள் எப்படி ஸ்கான் செய்ய!!வழி உண்டு!!!
தன்னை நோக்கி தானே செய்யும் ஆத்ம சோதணைதான் அந்த ஸ்கான்!!உடல் பயிற்சி ,யோகா ,நடை பயிற்சி எப்படி உடலுக்கு வலு, மற்றும் ஆரோக்கியம் அளிக்கிறதோ மனம் சம்பந்தப்பட்ட உடலுக்கும் மனக்கட்டுப்பாடும், பயிற்சியும் தேவை.
இதற்குத் தேவை தூய்மையான மனம்.தூய்மையான உடல்,மனச் சாந்தம் ,மனோசக்தி, நல் ஆரோக்கியம் !!!!
மனம் அமைதியின்றி இருக்கும்போது என்ன செய்ய!!மன நாட்டம் இன்றி செய்யும் அனைத்து செயல்களும் வீணே!!
மனம் சிறிதாவது அமைதியாக இருந்தால்தான் உணர்ச்சி வசப்படுதல், கோபம், அவசரம், படபடப்பு, முறையற்ற காமம், பழிவாங்கும் எண்ணம், பகைமை, தேவையற்றப் போட்டி போன்றவை இல்லாமல் இவ்வாழ்க்கையை மனம் எதிர்கொள்ளும்!!
தினமும் அதிகாலையோ, அதாவது பிரம்ம மூகூர்த்த நேரத்தில் அல்லது உறங்கும் முன்போ மனத்தை நோக்கி உங்களுக்குள்ளேயே கேள்வியை எழுப்பத் தொடங்குங்கள்!!
அதுதான் விசாரணை!! ஆம் ஆத்ம விசாரணை!!கேள்வியும் நீங்களே!!பதிலும் நீங்களே!!உங்கள் மனத்துக்குள்ளேயே விடையைக் காண முயலுங்கள்!!
ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணத்தை தேட முயலுங்கள்!!சிலர் நல்ல நிலையிலும்,சிலர் துன்பப் பட்டும் இருக்கிறோம்!!இதற்கான விடையைத் தேட முயலவும்!!இறுதியில் அப்படியென்றால் நான் யார் என்றக் கேள்வியைக் கேட்டு பதில் காண முயலுங்கள்!!
திடீரென்று உயிர் பிரிகிறது!!டாக்டர் வந்து உயிர் பிரிந்ததற்கான காரணத்தை சொல்கிறார்!!ஹார்ட் அட்டாக் என்கிறார்!!!உண்மையில் அதுதான் காரணமா!!யோசியுங்கள்!!அட்டாக்கால் மரணமில்லை பயணம் முடிந்துவிட்டது!!அதனால்தான் மரணம் என்று யாரும் ஏற்றுக்கொள்வதில்லையே!!
மன அமைதியின்றி,மன நாட்டமின்றி ,மன ஈடுபாடு இன்றிசெய்யப் படும் இறைவனது சேவை எவ்விதத்திலும் உதவாது!!
எனவே நான் யார் என்றக் கேள்வியை எழுப்பி ,பின் யோகம்,தியானம் என்றுத் தொடருங்கள்!!முதலில் குழப்பங்கள் மறையும்!!
பின் புதிய வாழ்க்கைதான்!! ஒளி,செயல்வேகம்,சக்தி, ஞாபக சக்திப் பெற்று இன்பமோ இன்பம்தான் !!!
இறைவனும் தெரிவானே!!
0 Comments:
Post a Comment
<< Home