நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Monday, May 22, 2006

நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 305

வீரனுக்கு அழகு துல்லியம்

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை. படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).

நம்பிச் சாவது கோழி
நம்பாமல் வாழ்வது காக்கை
மாறாமல் இருந்து அழிந்தது டினோசர்
மாறிக் கொண்டே வாழ்வது பச்சோந்தி

பறவை மிருக ஜாதி தரும் பாடம்
மனித ஜாதிநம்பிக்கைக்கு ஒரு வரம்

மாறாமல் இரு எனச் சொல்வது
சொல்பவர்க்கு நல்லது
மாறிக்கொண்டே இருப்பது
கேட்பவர்க்கு நல்லது

மாறாத உலகில்
மாற்றம் ஒன்றே நிரந்தரம்

காலத்துக்கேற்ற மாற்றம்
தரும் வாழ்வில் ஏற்றம்
இது புரியாமல் புலம்புவது
யாருடைய குற்றம் ?

பொறுத்துபோ, புறக்கணி, கடந்துபோ

0 Comments:

Post a Comment

<< Home