நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Friday, May 12, 2006

நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 303

வெற்றியின் இரகசியம்

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).


திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தேன்
கைக்குட்டையில் முடிச்சிட்டேன்
புதிதாய் மோதிரம் விரலில் அணிந்தேன்
எழுதி வைத்து உரக்கப் படித்தேன்
பொருள் பல தொடர்புபடுத்தினேன்
துன்ப நினைவுப் பதிவுகளை
மறக்க முடியவில்லை.

கழிந்துவிட்ட துன்பத்தை
நினைவுகூர்வது
என்ன இனிமையானது.
நினைவு கூறப்பட்ட
என் கவலைகள்
என்ன இனிமையானது.
என் நிகழ்கால மகிழ்விற்கு
வளம் சேர்க்கும் சோக எண்ணம்
என்ன இனிமையானது

குறிக்கோளை அடையும்
ஒருமுக உழைப்புக்கு
உரம் தரும்
தோல்வியெனும் கசப்பு.
அக்கசப்பின் சுவையோ
பெற்றுத் தரும்
வெற்றியெனும் இனிப்பு

வெற்றிபெற தோற்பது போல
வெற்றிச்சர்க்கரையின் சுவையைப்
பலர் சொல்லக் கேட்டேன்.
கேட்ட பின் உணர்ந்தேன்
அதன் சுவை சுவைத்தால் தான்
அறியமுடியும்.
சுவைக்கத் தேவை
தோல்வியெனும் கசப்பு

சொல் என்பது செயலாகாவிடில்
சொல்லிப் பயனில்லை
தோல்வியென்பது வெற்றியாகாவிடில்
தோல்வியில் பயனில்லை
எது பலன் தாராது எனக் கண்டுணரும் தோல்வி
எது பலன் தரும் எனக் கண்டுணரும் வெற்றி
இரண்டும் ஒன்றுக்கொன்று சுமைதாங்கி

தோல்வியென்பது ம(மி)திக்க வேண்டிய ஒன்று
வெற்றியென்பது ர(ரு)சிக்க வேண்டிய ஒன்று
இரண்டும் சமமென்பது நி(க)னைக்க வேண்டிய ஒன்று

0 Comments:

Post a Comment

<< Home