நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Friday, May 19, 2006

நம்பிக்கை போட்டிக்கான கதை - 105

300 $

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கதை. படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).

பெங்களூர் விமான நிலையம். மணி இரவு 11 மணி. சிங்கபூரிலிருந்து வந்த விமானிகள் அனைவரும் வெளியே வந்துகொண்டிருந்தோம். என் கையில் இருந்த ஒரேயொரு லக்கேஜை பார்த்த கஸ்டம்ஸ் அதிகாரி எதுவும் கேட்காமல் போக விட்டார். 'Welcome to Bangalore' சொல்லி கையில் பூங்கொத்தை கொடுத்த அந்த கெம்ப்ஃபோர்ட் மங்கை என்னை வித்தியாசமாக பார்த்தாள். வழக்கமாக வரவேற்க வந்தவர்கள்தான் ப்ளகார்ட் வைத்திருப்பார்கள். ஆனால் ஃப்ளைட்டில் வந்த நான் கையில் ப்ளகார்ட் வைத்திருந்தேன். அவளை பார்த்து புன்னகைத்தேன். ஐந்து மணி நேரம் முன்பு வரை நான் மட்டும் என்ன இப்படி ப்ளகார்டுடன் வருவேன் என்றா நினைத்தேன்!

ப்ரீபெய்ட் டாக்சி கெளன்ட்டரில் ஆர்டி நகருக்கு ஒரு சீட்டு வாங்கிவிட்டு வெளியேறினேன். ஆர்டி நகரில்தான் கெளதமின் வீடு உள்ளது.

லேசான மழை பெய்து பெங்களூர் வழக்கம் போல் நசநசப்பாக இருந்தது. என்னுடன் பயணித்த கார்த்திக் என்ற சாஃப்ட்வேர் பையன் என்னிடம் 'I still feel very guilty Sir... Hope God forgives me... Buh Bye..' என்று சொல்லிவிட்டு 'மச்சான், எப்பிட்றா இருக்க' என்று கேட்டுக்கொண்டு அவன் நண்பர்களை நோக்கி 555 பாக்கெட்டை காட்டிக்கொண்டே ஓடினான்.

'அனந்தநாராயணன்' என்ற பெயரெழுதிய ப்ளகார்ட்டை உயர்த்தி பிடித்தேன். கூட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டியதுதான். அனந்தநாராயணன் அவரது மகனைத்தான் தேடிக்கொண்டிருப்பாரே தவிர இதை பார்க்கப்போவதில்லை. டாக்சி, ஆட்டோ என்று நச்சரிப்புதான் தாங்கவில்லை. கூட்டம் அடங்கியபின் 10-15 பேர்தான் அங்கே இருந்தார்கள். டாக்சி, ஆட்டோக்காரர்களும் இது தேறாத கேஸ் என்று கிளம்பிவிட்டார்கள். அந்த 15 பேரில் வயதான ஜோடி ஒன்று தான். அவர்களாகத்தான் இருக்க வேண்டும். பெரிய மீசை, கிருதா எல்லாம் வைத்திருந்தார் அந்தப்பெரியவர். ஏனோ அவரைப்பார்த்தால், அந்த காலத்து ரிவொல்யூஷனரி இளைஞரைப்போல் இருந்தது. நிறைய ஜெயகாந்தன் கதைகள் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர்கள் அருகில் சென்றேன். என் கையில் இருந்த ப்ளகார்ட்டை சற்று குழப்பமாக பார்த்தார்கள்.

'நீங்க.... அன... Mr. அனந்தநாராயணன் தானே?'

'ஆமா... ஆனா நீங்க... நீங்க யாருன்னு தெரியலயே...'

'என் பேரு ஸ்ரீனிவாஸ்... கெளதமோட friend...'

அந்த வயதான அம்மாள் முகத்தில் கலவரம்.

'கெளதம் எங்கே?'

'அவர் வரல... என் கிட்ட இந்த லெட்டரை குடுத்து அனுப்பினார்... ' என்று சொல்லி ஒரு கவரை நீட்டினேன்.

'முந்தா நாள் கூட டிக்கெட் கன்ஃபர்ம் ஆயிடுத்துன்னு ஃபோன் பண்ணானே...' என்றாள் அந்த அம்மாள், என்னை சந்தேகத்துடன் பார்த்தபடியே!

கவரை பிரித்துக்கொண்டே 'இன்னிக்கு அவனுக்கு மெயில் பண்ணிப்பார்த்தேனே... ஆட்டோ ரிப்ளை கூட எனேபில் பண்ணியிருந்தானே.... வர்ற வழில ஏதானு?' என்றார் அவர்.

'ஒன்னும் ஆகல அங்கிள்... கவல படாதீங்க... சிங்கப்பூர்லேந்து அவர் அவசரமா திரும்பிபோற மாதிரி ஆயிடுத்து...'

'என்னப்பா சொல்ற? சிங்கப்பூர் வரை வந்துட்டு திரும்ப போய்ட்டானா? என்ன ஆச்சு?'

'பொண்டாட்டி கொழந்தேளுக்கு ஏதானா? சீக்கிரம் சொல்லுப்பா... நேக்கு தலய சுத்திண்டு வர்றது...'

'ஒன்னும் இல்லை மாமி... கவல வேண்டாம்... வாங்க, வீட்டுக்கு போகலாம். உங்கள வீட்டு வரைக்கும் ட்ராப் செய்யச்சொல்லி கெளதம் சொல்லியிருக்கார்' என்று டாக்சி ஸ்டாண்ட் நோக்கி நடந்தேன். டாக்சியில் ஏறிய பிறகு அவர்கள் கெளதமின் லெட்டரை படித்துக்கொண்டு வந்தார்கள். அதற்குள் நாம் சிங்கப்பூரில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

சிங்கப்பூர் விமான நிலையம்.

சியோலில் இருந்து வந்து இறங்கியவுடன் நேராக ஃப்ரீடூருக்கு பதிவு செய்யும் கவுண்ட்டருக்கு சென்றேன். அங்கு எனக்கு முன்பே பெரிய கூட்டம் இருந்தது. சன் ஃப்ரான்ஸிஸ்கோவிலிருந்து வேறொரு விமானமும் வந்திருந்தது. அடுத்து பெங்களூர் செல்லும் விமானம் இன்னும் 6 மணி நேரம் கழித்து தான் கிளம்பும். அதனால் அந்த கூட்டத்தில் நிறைய இந்திய தலைகள். அந்த கூட்டத்தில் ஒருவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருந்தார். பார்த்தாலே தெரிந்தது, அமெரிக்காவில் செட்டில் ஆகி எப்போதாவது இந்தியா செல்லும் நபர் என்று. இவர் தமிழர் போல இருந்தார். மனைவி கண்டிப்பாக வட நாட்டை சேர்ந்தவள். குழந்தைகள் அமெரிக்க வளர்ப்பு!

திடீரென்று அவருக்கு முன்னால் இருந்த வாலிபர்களை பார்த்து கத்தினார்.

'Speak another word and you are dead, you sonafabitch....'

அவர் கண்கள் சிவந்திருந்தன.

ஹே என்று கத்தியபடி அந்த வாலிபர்கள் கையை உயர்த்தி ஹை ஃபைவ் செய்து கொண்டு சிரித்தார்கள். அப்படி என்ன கிண்டல் செய்திருப்பார்கள் என்று யோசித்தேன். ரொம்ப நேரம் அவர் தன் மனைவியிடம் ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தார். அவளும் பதிலுக்கு என்னமோ சொல்லிகொண்டே வந்தாள். 'atrocious' என்ற வார்த்தை மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டது. அவர்களுக்குள் சண்டையா இல்லை அந்த வாலிபர்களை திட்டுகிறார்களா என்று புரியவேயில்லை.

இரண்டு மணி நேர டூரில், விமான நிலையத்தை விட்டு வரும்போதே அரை மணி நேரம் முடிந்திருந்தது. பேருந்தில் என் அருகில் அந்த குறும்புக்கார இளைஞர்கள் அமர்ந்தார்கள். கைடை கவனிக்க விடாமல் ஏதாவது தொந்தரவு செய்வார்களோ என்று பயந்தேன். நல்லவேளை சமர்த்து பையன்களாகவே வந்தார்கள். கைடு தான் அனாவசியமாக சிரித்து எரிச்சல் ஏற்படுத்தினார். சிங்கப்பூர் நகரம் முழுதையும் பேருந்தில் இருந்தபடியே பார்த்தோம். சிங்கப்பூரின் தேசிய நாள் விரைவில் வரவிருந்ததால், பல சாலைகள் மூடப்பட்டு இருந்தன. இருந்தும் அந்த கைடு லாவகமாக சென்று சிங்கப்பூர் ஆற்றில் கொண்டு விட்டார். போட்டிங் செல்லும் போது அந்த வாலிபர் கூட்டத்திற்கு புகைப்படங்கள் எடுக்க உதவி செய்தேன். திரும்ப விமான நிலையம் வரும் வழியில், ஒரு இளைஞன் பேச்சு கொடுத்தான்


'ஹலோ... '

'ஹாய்'

'என் பேரு கார்த்திக்... யூஎஸ் லேந்து வர்றோம் நாங்க எல்லாம்... பெங்களூர் போய்கிட்டு இருக்கோம்...'

'ஓ... நான் ஸ்ரீனிவாஸ்... நான் ஒரு டாக்டர்... சியோல்ல ஒரு கான்ஃபரன்ஸ் அட்டென்ட் பண்ணிட்டு வர்றேன்... நீங்க எல்லாம் யூஎஸ் ல வேலை பாக்கறீங்களா?'

'இல்ல இல்ல... பெங்களூர்லதான் வேலை... ஆன்சைட் போய்ட்டு வர்றோம்... 9/11 க்கு அப்புறம் நிறைய வேலை அவுட்சோர்ஸ் ஆயிட்டதால, அங்க பெர்மணெட்டா போக வழியில்ல....'

'அதனால என்ன... இந்தியாலயே I am sure you guys are paid well... Moreover, Standard of Living is also coming up, இல்லையா?'

'ஆமா ஆமா... அத போய் அந்த ரெண்டாவது ஸீட்ல உக்காந்திருகான் பாருங்க, அவன் கிட்ட சொல்லுங்க...' என்று க்யூவில் கத்திய நபரை காட்டினான்.

'என்ன சண்டை அவர் கூட? ஏர்போர்ட்லயே கத்திக்கிட்டு இருந்தார் உங்கள பாத்து...'

'SFO லேந்தே பிரச்சினை டாக்டர் அவன் கூட... கைல யூஎஸ் சிடிசன்ஷிப் இருக்குங்கற திமிரு... செக்கின் பண்ண க்யூல நிக்கும் போதே சண்டை போட்டான்... These Desi Buggers ஆம்... 10-15 வருஷம் முன்னாடி இவன் என்னவோ தெரியல... அதோட அவன் பொண்டாட்டி வேற, ரொம்ப பேசறா.... பாருங்க, பஜாரி மாதிரியே இருக்கா...'

'ஹேய்...'

'சாரி சார்... அவங்க மேல இருந்த கோவத்துலதான் I had to use such words... அப்புறம், we had big arguments... இந்தியால அது சரியில்ல, இது சரியில்லன்னு ரொம்ப பேசினான்... ரொம்ப திமிர் சார் இவனுங்களுக்கு, பத்து வருஷம் முன்னாடி பொறந்து போய்ட்டாங்க, இல்லன்னா இங்க தான் இருக்க போறாங்க... அதுல இந்தியா பத்தி கொற சொல்ல என்ன தகுதி இவங்களுக்கு?'

'Yeah Right...'

'அப்டி கசப்பா இருந்தா இந்தியா எதுக்கு சார் வரணும் இவனுங்க? அங்கேயே இருக்க வேண்டியது தானே?'

'I totaly agree with you... ஆனா, if you do not mind, I would make a comment...'


'சொல்லுங்க....'

'எனக்கு, as a third person, நீங்க பேசறத பாத்தா, நம்பளால போக முடியலயேங்கற வருத்தம் தான் தெரியுது... அதுதான் கோவமா மாறி அவரை திட்ட சொல்லுது...'

ஒரு நிமிடம் என்னை முறைத்து பார்த்தான். பிறகு 'May Be' என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டான்.

இறங்கும்போது அந்த அமெரிக்க வாழ் இந்தியரை பார்த்தேன். பயங்கர டிஸ்டிர்ப்டாக இருந்தார். ஏனோ அந்த கார்த்திக் & கோ மீது எனக்கு கோபமாக வந்தது.


மீண்டும் சிங்கப்பூர் விமான நிலையம். பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு கொஞ்சம் சாக்லேட்ஸ் வாங்கிக்கொண்டேன். பெங்களூர் விமானம் கிளம்ப இன்னும் 2 மணி நேரம் இருந்தது. ட்ராவல் ஏஜென்ட் ஏதோ ஒரு லெளஞ்சுக்கு ஒரு கூப்பன் கொடுத்தது ஞாபகம் வந்தது. டெர்மினல் 1ல் இருந்து ஸ்கைபஸ் பிடித்து டெர்மினல் 2 வுக்கு சென்று அந்த ரெயின் ஃபாரஸ்ட் லெளஞ்சை கண்டுபிடிப்பதற்க்கே 15 நிமிடங்கள் ஆகிவிட்டன.

அங்கே ரிஸப்ஷனில் அனுமதி சீட்டை காட்டி உள்ளே போக காத்திருந்தேன். கார்த்திக் & கோ அங்கிருந்த சிங்கம்-புலி பொம்மைகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று பக்கத்திலிருந்த சைபர் கஃபேயிலிருந்து பஜாரி என்று கார்த்திக்கால் அழைக்கப்பட்ட பெண்மணி கத்திக்கொண்டே வந்தாள்.

'This is the limits Goutham... Bahut ho gaya... What does you brother think of himself?'

பின்னாலேயே கெளதம்.

'Savitha.... Listen to me... Please... He is a frustrated soul... Even we have made mistakes...'

'Whatever it is... Me nahi jaa rahi hun udhar... If you want, you can go...'

இவ்வாறு கத்திக்கொண்டே உள்ளே சென்று விட்டாள் அவள். பாவமாக பார்த்தபடியே கெளதமும் உள்ளே சென்றார். கார்த்திக் சொன்னது சரிதானோ என்று ஒரு நிமிடம் யோசித்தேன்.


டாக்சி இப்போது தான் ஏர்போர்ட் ஜங்க்ஷனை கடந்திருந்தது. அதற்குள் இவர்கள் லெட்டரை படித்து முடித்துவிட்டபடியால், நாம் சிங்கப்பூரில் நடந்த மீதி கதையை அப்புறம் பார்ப்போம்.

'என்னங்க இது... இப்டி பண்ணிட்டானே.... எல்லாம் அந்த ராட்சஸி பண்ற வேலை....'

'ஹூம்... என்னத்த சொல்றது... இந்த சித்தார்த்துக்கும் வேற வேலை இல்ல... அவா கிட்ட சண்டை போடணும்னா வந்தப்புறம் போடறது... அப்டி என்னதான் எழுதினானோ தெரியல மெயில்ல...'


'கொழந்தேள் வராளேன்னு பட்சனம் எல்லாம் பண்ணி வெச்சேனே... எல்லாம் பாழ்....'

'அதுதான் முக்கியம் பாரு இப்போ... ரெண்டு வருஷம் கழிச்சு புள்ளைய பாக்க போறோமேன்னு கனவு கண்டுண்டு இருந்தேன்...'

'என்ன கனவு கண்டேளோ போங்கோ... அப்போவே அடிச்சுண்டேன்... அமெரிக்கா எல்லாம் வேண்டாம்... இங்கேயே வேல பாக்கட்டும்னு... கேக்காம அனுப்பினேள்... இப்போ சொந்தமே அறுந்து போயிடுமோன்னு இருக்கு...'


'என்னத்துக்கு அழற இப்போ... சொந்தமெல்லாம் அறுந்து போகாது... என்னமோ என்னையே கொறை சொல்றியே... அவன் அங்க போனதுனால தான் இன்னிக்கு சந்தோஷமா வாழ முடியறது... இன்னிக்கு இத்தனை நகை போட்டுண்டு சுத்தறியே... எல்லாம் எதுனால?'

'நம்ம புள்ளையே நம்மள வேண்டாம்ன அப்புறம் காசு நகையா முக்கியம்? எதுவுமே வேண்டாம் நேக்கு....'

'கொஞ்சம் ப்ராக்டிகலா யோசி... இன்னிக்கும் அவன் அனுப்பற அந்த 300 டாலர்லதான் காலம் ஓடிண்டு இருக்கு... அது இல்லன்னா இந்த சித்தார்த் மட்டும் மதிப்பான்னு நினைச்சுண்டு இருக்கியா? அது தெரிஞ்சு தான் இனிமே பாக்க வரமாட்டேன் ஆனா பணம் மட்டும் அனுப்பறேன்னு எழுதியிருக்கான் கெளதம்'


'சித்தார்த் அப்பிடி என்ன தான் எழுதி தொலைஞ்சானோ மெயில்ல... போய் நாலு வார்த்தை கேக்கறேன் அவன....'

கண்டோண்மெண்ட் ஸ்டேஷன் வந்து விட்டோம். அவர்கள் குடும்ப விஷயங்களை கேட்டு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். நான் நெளிவதை பார்த்து அவர்களும் அப்புறம் பேசவில்லை. அதற்குள் நாம் மீண்டும் சிங்கப்பூர் செல்வோம்.

ரெயின்ஃபாரஸ்ட் லெளஞ்சுக்குள் சென்று ஒரு கப்புச்சினோ எடுத்துக்கொண்டு அமர்ந்தேன். எதிர் டேபிளில் வந்து கெளதம் தன் குடும்பத்துடன் வந்து அமர்ந்தார். அரை தூக்கத்தில் இருந்த குழந்தைகள் இருவரும் அப்பா-அம்மா வின் சண்டை புரியாமல் விழித்துக்கொண்டிருந்தன. பக்கத்து டேபிளில் இருந்த கார்த்திக் மற்றும் குழுவினர் கூட சற்று ஆடித்தான் போனார்கள் இவர்கள் சண்டையை பார்த்து.


'Dekho Gautham, after this kinda insult, do ya think any sane person would go and meet ua brother?'

'Do take it as an insult, my dear..' மன்றாடினார் கெளதம்.


'What? I read the email... He calls me a bitch... 'Do not get that bitch here'.... Aah, how can you stand this Gautham?'

'To kya hua? Are they tryin to restrain him atleast? I am not going to go to your place... I will take the next flight to Delhi from Bangalore... You can come there when you want...'


'Hey Bhagwaan..' என்றபடியே நாற்காலியில் சாய்ந்தார் கெளதம். அவரை தூக்க அனைவரும் ஓடுனோம், கார்த்திக் உட்பட.

கெளதமின் வீடு வந்துவிட்டது. அதனால் மீதி சிங்கப்பூர் கதை அப்புறம்.

அந்த frustrated soul ஆன சித்தார்த்தை வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வாசலிலேயே நான் கிளம்புகிறேன் என்றேன். ஆனால், கெளதமின் அப்பா அம்மா உள்ளே வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள்.

என்னை சோஃபாவில் அமர வைத்து விட்டு உள்ளே சென்றார்கள். கசமுசாவென்று உள்ளேயிருந்து சத்தம் வந்தது. திடீரென்று ஒருவன் ஏதோ கத்திக்கொண்டே வெளியே வந்தான். என்னைப்பார்த்ததும் லேசாக புன்னகைத்தவன்,

'தாங்க்யூ சார், இனிமே இந்த பக்கம் தலை வெச்சே படுக்க கூடாதுன்னு சொல்லிடுங்க அந்த அரக்கி கிட்ட, I am sorry, if you are a friend of hers...'


'Well, நான் யாருக்கும் friend இல்ல... சும்மா ஏர்போர்ட்ல பாத்தேன், அவ்ளோதான்...'

அப்போது அழுதுகொண்டே வந்த அவனுடைய அம்மா அவனைப்பார்த்து கேட்டாள்,

'அப்டி என்னடா எழுதி தொலைஞ்ச அந்த ஈமெயில்ல?'

'சவிதாவ தாம்மா கூட்டிண்டு வர வேண்டாம்னு சொன்னேன்... இவனையா வர வேணாம்னு சொன்னேன்... உன் ஜேஷ்ட குமாரன் பொண்டாட்டி தாசனா இருக்கான்... அதுக்கு என்ன என்ன பண்ண சொல்ற?'


'அவ வந்தா உனக்கென்னடா... வந்து நாலு நாள் இருந்துட்டு டெல்லி போய்ட போறா...'

'அந்த நாலு நாள் தான வம்பே.... போன தரம் ஞாபகம் இருக்கா? நீ ஆசையா பண்ணின பட்சணத்த அந்த பசங்கள சாப்ட விடாம தடுத்தா... என் குழந்தைகளோட விளையாட விடல... கேட்டா ஹைஜீனாம்... அப்போ நாம எல்லாம் வியாதில வாழ்ந்துண்டு இருக்கறவாளா?'

'இனிமே வரவேமாட்டேன்னு லெட்டர் அனுப்பியிருக்கான் பாருடா... உங்கள எப்பிடியெல்லாம் வளத்தோம்டா... ஒத்துமையா இருப்பேள்னு.... இப்டியா அடிச்சுண்டு நிப்பேள்...'


'அட போம்மா... நீங்களே சொல்லுங்க சார்... அவன இஞ்சினீயரிங் படிக்க வெச்சு அப்புறம் அமெரிக்கா அனுப்பி இவங்க சீராட்டினதுக்கு அவன் காட்டின மரியாதை, அங்கேயே கல்யாணம் பண்ணிண்டு வந்து நின்னதுதான்! அப்புறம் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தரம் வந்து படம் காட்டிட்டு போறது... அவன் போடற ரொட்டித்துண்டுக்காக இவங்களும் அவன் சொல்றத எல்லாம் கேட்டுண்டு இருக்கறது...'

இவனை frustrated soul என்று கெளதம் சொன்னதில் அர்த்தம் இருப்பதாகவே பட்டது. ஆனால் அந்த Frustration ல் ஒரு நியாயம் இருப்பதாகவும் பட்டது.

இதைக்கேட்டவுடன் கெளதமின் அப்பாவிற்கு அசாத்திய கோபம் வந்தது.


'ஏண்டா மூணாவது மனுஷா முன்னாடி இப்பிடியெல்லாம் பேசற?' என்றார்.

பதிலுக்கு சித்தார்த்தும் எகிறினான்

'ஏம்பா என்ன திட்ற? இவர் கிட்ட நம்மள பத்தி அவன் என்னவெல்லாம் சொல்லி இருப்பான் லெட்டர் குடுக்கறச்சே... அதான் அவன பத்தியும் தெரியட்டும்னு சொல்றேன்...'

'அதெல்லாம் இல்லை, நான் கிளம்பறேன் இப்போ... எனக்கு ரொம்ப லேட் ஆகுது...'

'Okay Sir, நீங்க கிளம்புங்க...' என்றான் சித்தார்த்.


இவர்களிடம் சிங்கப்பூரில் நடந்த உண்மையை சொன்னால் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று யோசித்தபடியே எழுந்து நடந்தேன்.

கீழே விழுந்த கெளதமை மெள்ள அங்கிருந்த கட்டிலில் கிடத்தினோம். மாசிவ் ஹார்ட் அட்டாக். அங்கிருந்த லிமிடெட் மருந்துகளை கொண்டு என்னாலான முதலுதவியை செய்தேன். வேறு டாக்டர் வர 20 நிமிடங்களாவது ஆகும் என்றார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்தது. அமெரிக்க பிரஜையின் பூத உடல் என்பதால் அதற்கு ராஜ மரியாதை. சவிதா சத்திய தைரியமான பெண். சுத்தமாக அலட்டிக்கொள்ளவேயில்லை. உடனடியாக அமெரிக்கன் எம்பஸியை தொடர்பு கொண்டு என்னென்னவோ பேசினாள்.

என்னிடம் பஜாரி எனப்பட்ட அந்த சவிதா வந்தாள். அவள் கண்கள் சற்று கலங்கியிருந்ததாக தோன்றியது. என்னதான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் கணவன் இறந்துபோன துக்கம் இருக்காதா!

'Hello Doctor, I hope you are travelling to Bangalore...'

'Yeah...'

'Would you do me a favor?'

அவளுடைய கணவனின் பெற்றோர் மற்றும் தம்பி அவனை நம்பியிருப்பதை பற்றியும், அவன் இறந்து போன விஷயம் தெரிந்தால், அவர்கள் எவ்வளவு துக்கம் அடைவார்கள் என்றும் சொன்னாள். ஏற்கனவே அவள் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பையும் சொன்னாள். அதனால், இப்போது இந்தியா செல்வது சரிப்படாது என்றாள். அவளுடைய சொந்தங்களைப்பற்றி தெரியவில்லை. அவளும் சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை.

மேலும் கெளதமின் தம்பி அனுப்பியிருந்த ஈமெயிலை காரணமாக அவர்கள் அனைவரும் திரும்ப அமெரிக்க சென்றுவிட்டதாக சொல்லி, என்னையே லெட்டர் எழுதச்சொன்னாள். அதில் மாதம் 300 டாலர் அனுப்புவதாகவும் எழுதச்சொன்னாள். எழுதிவிட்டு நிமிர்ந்துபார்த்தேன். புரிந்து கொண்டவள்,

'I will send it every month... After all this is the least I could do for my Goutham' என்ற அவளது கண்கள் குளமாகின.

'I am very sorry, we should not have spoken like that...'

யாரென்று பார்த்தால், கார்த்திக்! அவர்கள் கேலி செய்ததால் தான் அவருக்கு நெஞ்சு வலி வந்தது என்று ரொம்ப கில்டியாக ஃபீல் செய்தான்!

டாக்சியில் ஏறும் போது,

'உங்க சாக்லேட்ஸ விட்டுட்டு போறீங்க...' என்றபடியே சித்தார்த் வந்தான்.

'ஓ... Thanks... Bye...'

'One more thing...'

'...'

'கண்டிப்பா மாசம் 300 டாலர் அனுப்பறதா சொன்னானா சார்?'

2 Comments:

At 9:16 PM, Blogger பரஞ்சோதி said...

சோதனை பின்னோட்டம்.

 
At 12:59 PM, Blogger meenamuthu said...

\\ கண்டிப்பா மாசம் 300 டாலர் அனுப்பறதா சொன்னானா சார்?'\\

இப்படியும் மனிதர்கள்..

\\ 'I will send it every month... After all this is the least I could do for my Goutham' என்ற அவளது கண்கள் குளமாகின. \\

படிப்பவர் கண்களும்..

 

Post a Comment

<< Home